technology

img

30 லட்சம் பேரின் வேலைக்கு உலை வைக்கும் ஆட்டோமேஷன்... 100 பில்லியன் டாலர் ‘மிச்சமாகும்’ என ஐடி நிறுவனங்கள் கணக்கு...

புதுதில்லி:
உலகளவில் வர்த்தகம், ஐடிசேவை என அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் புகுத்தப்பட்டு வருகிறது. இதில், கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின் இந்திய நிறுவனங்களும் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கு இயந்திரமயமாக் கல் (Automation) சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளன.

இந்நிலையில்தான், ஐடி நிறுவனங்களின் இந்த புதிய போக்கு காரணமாக, இந்திய ஐடி துறையில் மட்டும்2022-ஆம் ஆண்டுக்குள் மட்டும் சுமார்30 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம்(Nasscom) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான போட்டி இருக் கும் காரணத்தால், அவைகள் தங்களுக்குள் பணிகளை வேகமாகவும், குறைந்த செலவிலும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் எப்போதுமே இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், ஊழியர் கள் அலுவலகத்திற்கு வந்துதான் பணியாற்ற வேண்டும் என்று இருக்கக் கூடிய பல பிரிவுகள் முடங்கின. எதிர்காலத்திலும் இதுபோன்ற சவால் களை எதிர்கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஆட்டோமேஷனே தீர்வு என்று இந்திய ஐடி நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே, மெல்ல மெல்ல அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவது என்று முடிவு செய்து விட்டன.குறிப்பாக, டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களும், உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனங்கள் ஆட்டோமேஷனைக் கையில் எடுக்க முடிவு செய்துள்ளன. இதனால் அடுத்த ஒரு வருட காலத்தில் இந்திய ஐடி துறையில் அதிகமானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என ‘நாஸ்காம்’ கூறுகிறது. இந்திய ஐடி துறையில் சுமார் 1.6 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 90 லட்சம் பேர்குறைந்த திறன் சேவை பிரிவுகளிலும், பிபிஓ பிரிவுகளிலும் பணியாற்றிவருகிறார்கள். இந்நிலையில், குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் பிபிஓ பிரிவுகளில் ஆட்டோமேஷன் அதிகளவில் புகுத்தப்படும் காரணத்தால் மொத்தமுள்ள 90 லட்சம் ஊழியர்களில் 30 சதவிகிதம்- அதாவது 30 லட்சம் ஊழியர் கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என ‘நாஸ்காம்’ தெரிவிக்கிறது.

இதில், 7 லட்சம் பேரின் வேலைகள்முழுமையான ஆட்டோமேஷன் காரணமாக ஒழித்துக்கட்டப்பட்டு விடும் என்றால், ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து செய்துவரும் டெக்னாலஜி மேம்பாடு காரணமாக மீதமுள்ள23 லட்சம் பேர்களின் வேலைகளும் பறிபோகும் என்று அது குறிப்பிடுகிறது.அதற்கேற்ப, டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல், டெக் மஹிந் திரா ஆகியவை ஆட்டோமேஷன் செய்வதற்காக, தற்போதே ஊழியர் களைப் பணிநீக்கம் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளன. இவ்வாறு 30 லட்சம் ஊழியர் களைப் பணிநீக்கம் செய்யும் போது, இந்திய ஐடி நிறுவனங்களால், 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை சேமிக்க முடியும் என்று கூறும் ‘நாஸ்காம்’ ஆய்வறிக்கை, ஒருபக்கம் 100 பில்லியன் டாலர் சேமிப்புமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமேஷன் மென்பொருள்நிறுவும் வர்த்தகத்தை பெறுவார்கள் என்பதுடன் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய மென்பொருள் உருவாக்குவதற்கான வர்த்தகத்தையும் பெறுவார்கள் என்றும் மதிப்பிட்டுள்ளது.

;